காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி அளித்துள்ளது. தனியார் அமைப்புகளும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றன.
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சேவாக்உயிரிழந்த அத்தனை வீரர்களின் குழந்தைகளையும்தன் பள்ளியில் படிக்க வைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், `` இந்த தருணத்தில் நாம் என்ன செய்தாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது. எனினும், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளை சேவாக் சர்வதேச பள்ளியில் சேர்த்து முற்றிலும் இலவசமாககல்வி அளிக்கத் தீர்மானித்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
ஹரியானா போலீஸில் பணியாற்றி வரும் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர்சிங், தன் ஒரு மாத ஊதியத்தைப் பலியான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின்குடும்பத்துக்குபகிர்ந்து அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் இந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளனர். விளையாட்டு வீரர்களில் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், விஜேந்தர் சிங் போன்றவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.