Type Here to Get Search Results !

கூகுள் வரைபடச் செயலியை நம்பி ஆற்றுக்குள் லாரியை விட்ட ஓட்டுநர்




வழி தெரியாமல் கூகுள் வரைபடச் செயலியைப் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார்.

பாலியில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று லாரி நிறைய கற்களை இறக்க வேண்டிய நிலையில் வழி தெரியாமல் திண்டாடினார் ஓட்டுநர் அகுஸ் ட்ரி பமங்கஸ், 23.

உடனே கூகுள் வரைபடச் செயலியைப் பயன்படுத்தி அதில் கூறப்பட்ட வழியில் சென்றார்.

மோட்டார் சைக்கிள்களுக்கான பாதையைச் செயலி காட்டியதாகவும் முன்னே சென்ற அகுஸ் பின்வாங்க முடியாத நிலையில் தொடர்ந்து ஒரு குறுகிய பாலம், சேதமடைந்த ஒரு மேல்நோக்கிய சாலை ஆகியவற்றில் பயணம் செய்ய நேரிட்டது. அப்போது லாரியும் அவர் காலை வாரி விட்டது. இயங்காத நிலையில் லாரி பின்னோக்கிச் சென்று ஓர் ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

அருகில் இருந்தோர் ஓட்டுநரைக் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தனர். காயங்களுடன் அகுஸ் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.


Top Post Ad

Below Post Ad