தற்போது டூப்ளிகேட் பான்கார்டு அல்லது பழைய பான்கார்டில்
திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண்கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டில் உள்ள நிரந்தரக் கணக்கு எண் வங்கிகணக்கு, வருமானவரி
தாக்கல், பிஎஃப் விதி டிராவ் போன்ற காரணங்களுக்குக் கட்டாயமாக உள்ளது.அதுமட்டும் இல்லாமல் 10இலக்கம் கொண்ட இந்தப்பிளாஸ்டிக் பான் கார்டைஒரு அடையாளஆவணமாகவும்பயன்படுத்தமுடியும்.இப்படிப்
பல்வேறு வகையில் உதவும் பான்கார்டைதொலைத்து விட்டால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. எனவே பான்கார்டு தொலைந்து விட்டால் புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.உங்களுடைய பான் கார்டு எண் மறந்து விட்டால் வருமானவரித் துறை இணையதளத்தில் உள்ள‘Know Your PAN’ என்ற சேவை மூலமாகப் பான் விவரங்களைப் பெற முடியும்.வருமான வரி இணையதளத்தில்
https://www1.incometaxindiaefiling.gov.in/eFilingGS/Services/VerifyYourPanDeatils.html
என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.பின்னர் ‘verify your PAN’ என்ற படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.
இங்கு தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் தங்களது பான் எண்ணை எளிதாகப் பெறலாம்.பான் எண் தெரியவந்த உடன் டூப்ளிகேட் பான்கார்டுக்கானகோரிக்கையை சமர்ப்பித்து புதிய கார்டைபெறலாம். தற்போது டூப்ளிகேட் பான் கார்டு அல்லது பழைய பான்கார்டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.