சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ப்ரோ விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் விலை குறித்த விபரங்கள் கசிந்துள்ளது.
பிரபல சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி, கடந்த வாரம் ரெட்மி நோட் 7-ஐ சீனாவில் அறிமுகம் செய்தது. இந்திய விலையில் இதன் விலை தோராயமாக 10,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாதம் இறுதியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ரெட்மி நோட் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை நோட் 6 விட குறைவு என்பது தான் ஆச்சரியம்.
இது குறித்து வெளிவந்த தகவலின்படி, 48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ உருவாக்கப்பட்டுள்ளது. ரெட்மியின் மற்ற ஸ்மார்ட்போன்களை காட்டிலும், இதில் உள்ள கேமராவின் சென்சார் முற்றிலும் வேறுபட்டது. இதற்கென பிரத்யேகமாக Samsung ISOCELL GM1 Ultra Clear sensor பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே போன்று நோவா 4 ல் Sony IMX586 sensor பயன்படுத்தப்பட்டது.
இது தவிர ரெட்மி நோட் 7 ப்ரோவில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 உள்ளதால், இதன் வேக திறன் சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரி சக்தியை பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. இந்த சிறப்பம்சங்களை வைத்து ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ரெட்மி நோட் 7 ப்ரோவானது கொடுக்கும் காசை விட அதிக தரனும், திறனும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதுவரையில் வெளிவந்த தகவலின்படி, 3GB RAM / 32GB உடைய ரெட்மி நோட் 7 ப்ரோவின் விலை 10,390 ரூபாய் என்றும், 4GB RAM / 64GB உடைய ரெட்மி நோட் 7 ப்ரோவின் விலை 12,460 ரூபாய் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிறது ரெட்மி நோட் 7 ப்ரோ: விலை விபரங்கள் வெளியானது!