ஆதார் சட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. சமீபத்தில் ஒரு வழக்கிலும் இதே உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.
இந்நிலையில், வருமான வரித்துறையை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம், “வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தங்களது நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். இப்பணியை மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.