நூறு, இருநூறுக்கே நமக்கு திண்டாட்டமா இருக்கு.. ஆனா ஒரு பூனைக்கு 1400 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்காம்!! ஜெர்மனியை சேர்ந்தவர் கார்ல் லாகர்பெட் என்பவர்.
புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர். மிகப்பெரிய பணக்காரரும்கூட அவருக்கு செல்லப்பிராணிகள் என்றால் உயிராம். அதனால் ஒரு பூனையை வீட்டில் வளர்த்து வந்திருக்கிறார். அந்த பூனைக்கு சௌபீட் என்று ஒரு பெயரும் வைத்தார்.
சௌபீட்டும் கலார்ல் அன்பில் கொஞ்ச நாளிலேயே விழுந்துவிட்டது. அந்த பூனை இல்லாமல் அவரால் இருக்கவே முடியாத நிலைகூட ஏற்பட்டுவிட்டது.
"சௌபீட்டை நான் கல்யாணம் செய்து கொள்ளக்கூட ரெடியா இருக்கேன்" என்று காரல் விளையாட்டுக்காக ஒருமுறை சொன்னார். இந்த நிலையில் கார்ல் கடந்த 19-ம் தேதி இறந்துவிட்டார்.
இதனால் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளிக்கொணரப்பட்டது. அப்போதுதான் கார்ல் தான் இறப்பதற்கு முன்பேயே தன் சொத்தின் ஒரு பகுதியை அதாவது 1400 கோடி ரூபாயை சௌபீட் மீது எழுதி வைத்தது.
தான் இறந்த பின்னரும் சௌபீட் செளக்கியமாக வாழ வேண்டும் என்றும் ஆசைப்பட்டு இப்படி சொத்தை எழுதி வைத்தது தெரியவந்தது.
செல்லப்பிராணிகளை ஆசையாக வளர்த்து காப்பது மட்டுமில்லாமல், தான் இறந்த பின்னும் நன்றாக வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை நினைத்து பெருமைப்படுவதா?
அல்லது ஒரு பூனைக்கு போய் 1400 கோடியை எழுதி வெச்சிட்டு இந்த கார்ல் போய்ட்டாரே நினைச்சு ஆச்சரியப்படுவதா தெரியவில்லை..
இருந்தாலும் சௌபீட்டுக்கு ரூ.1400 கோடி டூ டூ மச்தான்!!