சமீபத்தில் கூகுளில் முட்டாள் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புகைப்படமும், டாப் 10 கிரிமினல்கள் என தேடினால் தாவூத் இப்ராஹிம், கடாபி ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடியின் படமும் காட்டியது. இது போன்ற நிகழ்வுகளால் கூகுள் நிறுவனம் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது மோசமான முதல்வர் என தேடினால் பினராயி விஜயனின் படம் இடம் பெற்றுள்ளது.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய முனைப்போடு கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு களேபரத்திற்கு இடையே கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் காவல்துறை பாதுப்போடு சபரிமலையில் சென்று தரிசனம் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பினராயி விஜயன் இந்து மதத்தை அவதிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. கூகுளின் இந்த செயல் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் எதிர்க்கட்சி இருப்பதாகவும், பினராயி விஜயனின் நற்பெயரை சீர்குலைப்பதற்காக இவ்வாறு நடந்துள்ளதாகவும் கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது.