Type Here to Get Search Results !

குளிர் காலத்தில் கூந்தலை பாதுகாக்க என்ன செய்யலாம்.... என்ன செய்யக்கூடாது



குளிர்க் காலத்தில் நம் கூந்தல் மற்றும் அழகைப் பாதுகாக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம்... என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.



குளிர் காலத்தில் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும். கை கால் வறண்டு போகும். கூந்தல் வறண்டு உடையத் தொடங்கும். குளிர்க் காலத்தில் நம் அழகைப் பாதுகாக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம்... என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.



மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும். ரொம்ப சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது உங்கள் தலைமுடியை பாதித்து பலவீனமாக்கிவிடும், மற்றும் தோலையும் பாதிக்கும்.

* ரசாயன கலப்பு அதிகமில்லாத ஊட்டச்சத்து மிகுந்த ஷாம்புவையும் கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும்.

* இறுக்கமாக பின்னல் போடுவதோ அல்லது இறுக்கிக் கட்டுவதோ வேண்டாம். முடியை தளர்வாக பின்னலிடலாம்.

* மழையில் நனைந்துவிட்டால் அப்படியே தலையை காயப்போடாமல் தலைக்குக் குளித்துப் பின் முடியை நன்கு துவட்டி விடுவது நல்லது.

* நம் உடலைப் போலவே தலைக்கும் நீர்ச்சத்து தேவை. அதனால் தண்ணீர் அதிகம் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைப்பது தலைமுடிக்கும் நல்லது.



* மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் மண்டையோட்டை எண்ணெய் பசை உடையதாகவும், முடியை சிக்காக்கும் தன்மையும் கொண்டது. எனவே ஈரப்பதமற்ற தலை முடி இருப்பவர்கள், அரிப்பு மற்றும் பொடுகு பிரச்னை இருப்பவர்கள், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வேப்பெண்ணெய் (வேப்பெண்ணெய் ஒரு ஆன்டிபாக்டீரியல்) கலந்து தலைமுடிக்குத் தேய்த்து வரவேண்டும்.

* மழை நேரத்தில் முடி உடையாமல் இருக்க, பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.

* இந்த சீசனில் தலை முடி மிகவும் எளிதில் உடைய அல்லது உதிரக்கூடிய நிலையில் மிகவும் பலவீனமாக இருக்கும். எனவே தலைமுடியை காய வைக்க மிக அதிகமான சூட்டைப் பயன்படுத்தாதீர்கள். மிதமான சூட்டில் வைத்து ஹேர் ட்ரையரை பயன்படுத்தவும். அல்லது முடி பாதி உலர்ந்ததும் ட்ரையரை நிறுத்திவிடவும்.

* மழை சீசனை பொறுத்த மட்டில் முடி பலவீனமாவது மட்டுமில்லாமல் சிக்காகிவிடும். எனவே தலைக்குக் குளிக்கும் முன் தலையில் எண்ணெய் வைத்து ஊற வைக்க வேண்டும். உங்கள் முடிக்கு ஊட்டச்சத்தளிக்க பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி உச்சந்தலை மற்றும் தலைமுடியின் முழு நீளத்துக்கும் அதாவது முழுமையாக தடவி 45 நிமிடங்களுக்கு ஊற வைத்துப் பின் தலைக்குக் குளிக்க வேண்டும். பொடுகை தவிர்க்க சிறிதளவு வேப்பெண்ணெயும் கலந்து கொள்ளலாம். தலையின் ஈரப்பதத்தை தவிர்க்க சலூனுக்குச் சென்று ஹேர் ஸ்பா அல்லது ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். இது மண்டையோடு மற்றும் முடியின் ஆரோக்யத்திற்கு உதவும். 

* நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்வதால் சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

* வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சருமத்திற்கான ஈரப்பதம் கிடைக்கும். 


Top Post Ad

Below Post Ad