இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் எம்பி. எம்எல்ஏக்களின் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் தற்போது அமைச்சராக உள்ள பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்தது. 1998ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை விதித்துள்ளதால் அவரது அமைச்சர் பதவியும். எம்எல்ஏ பொறுப்பும் பறிபோகும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் 2வது வழக்காகும். இதற்கு முன்னால் சில வாரங்களுக்கு முன்னர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.