Type Here to Get Search Results !

அசுர பலம் பெறும் ஏர்போர்ஸ்.. இந்தியாவை கண்காணிக்க போகும் ஆங்கிரி பேர்ட்.. கலக்கும் இஸ்ரோ

இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் வரிசையாக இஸ்ரோ நிறைய செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. நிறைய விதமான பயன்பாடுகளுக்காக விண்ணில் சாட்டிலைட்டுகள் ஏவப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜிசாட் 7ஏ சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி எஃப் 11 மூலம் இந்த சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இன்று மாலை 4.10 மணிக்கு இது விண்ணை நோக்கி பாயும். இந்தியா கிரியோசனிக் எஞ்சின்களை தனியாக உருவாக்க தொடங்கியதில் இருந்து 1000 கிலோவிற்கு அதிகமான எடை கொண்ட சாட்டிலைட்டுகளை கூட எளிதாக விண்ணில் நிறுத்துகிறது. அதன்படி தற்போது கிரியோசனிக் எஞ்சின் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 என்ற நான்காம் தலைமுறை ராக்கெட் மூலம்தான் ஜிசாட் 7ஏ சாட்டிலைட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஜிசாட் 7ஏ சாட்டிலைட் 2250 கிலோ எடை கொண்டது. இது முழுக்க முழுக்க இந்திய ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும். இது கேயூ பேண்டில் அலைகளை அனுப்பும் என்று கூறுகிறார்கள். இதை இஸ்ரோ செல்லமாக ஆங்கிரி பேர்ட் என்று அழைக்கிறது. இது 8 வருடம் உழைக்க கூடியது. இதற்கு ஆங்கிரி பேர்ட் என்று பெயர் வைக்க காரணம், இந்த சாட்டிலைட் மூலம் இந்தியாவின் ஏர்போர்ஸ் புதிய பலம் பெற போகிறது. விமான கண்காணிப்பு, ரேடார் தொழில்நுட்பம், விமானங்களை சரியாக கண்டுபிடித்து அலெர்ட் செய்வது, தானியங்கி விமானங்களை கண்காணிப்பது என்று பல விஷயங்களில் இந்திய விமான படைக்கு இது உதவும். இதன் காரணமாக இந்திய விமானப்படை புதிய அரசு பலம் பெறும். அதன் காரணமாகவே இதற்கு ஆங்கிரி பேர்ட் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

Top Post Ad

Below Post Ad