ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புத்தாண்டு சலுகையை அறிவித்து உள்ளது.
அந்த வகையில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 100% கேஷ்பேக் ஏஜியோ வவுச்சர் வடிவில் வழங்கப்படும்
இதனை பெற பயனர்கள் தங்களது ஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.399 விலையல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ அறிவித்து இருக்கும் புத்தாண்டு சலுகையை பயனர்கள் டிசம்பர் 28ம் தேதியில் இருந்து ஜனவரி 30, 2019 வரை ரீசார்ஜ் செய்து சலுகையை பெற முடியும்.
புத்தாண்டு சலுகையின் கீழ் வழங்கப்படும் ஏஜியோ வவுச்சர்கள் பயனர்களின் மைஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.
இந்த வவுச்சர்களை பயனர்கள் ஏஜியோ வலைத்தளத்தில் (ajio.com) ரூ.1000 அல்லது அதற்கும் அதிக மதிப்பு உள்ள பொருட்களை ஒற்றை ஆர்டரில் வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூப்பனை மார்ச் 15, 2019-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்