Type Here to Get Search Results !

எஸ்.பி.ஐ வங்கியில் ஏ.ஐ அடிப்படையிலான வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை.!


ஏ.ஐ அடிப்படையிலான வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் ஏ.ஐ சேவைகள் தற்பொழுது நம்முடைய தினசரி பயன்பாட்டில் கலந்துவிட்டது என்பதே உண்மை.

இந்தியாவில் மிகப்பெரிய நிதி சேவை அமைப்பான பாரத ஸ்டேட் வங்கி அமைப்பு தற்பொழுது அதன் வங்கி பயனர்களுக்கு ஏ.ஐ அடிப்படையிலான வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய ஏ.ஐ அடிப்படையிலான வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை, பாரத ஸ்டேட் வங்கி கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது. முதல் முறையாகக் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டேட் வங்கி இந்தச் சேவையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தபடி, இன்று முதல் அனைத்து ஸ்டேட் வங்கி பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன் மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அசிஸ்டன்ட் இணக்கமுடைய அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்தச் சேவையை பயன்படுத்த முடியுமென்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை மூலம் பயனர்கள் அவர்ளின் அக்கௌன்ட் விபரங்கள், அருகில் இருக்கும் வங்கியின் விபரம், KYC ஸ்டேட்டஸ், SIP கால்குலேட்டர், அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட் மற்றும் கஸ்டமர் சர்விஸ் உதவி போன்ற அனைத்து விதமான சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

தற்பொழுது எஸ்.பி.ஐ வங்கியின் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை கூகுள் ஹோம் மற்றும் ஸ்மார்ட்போன்களில் சாதனைகளில் பயன்படுத்த முடியும். விரைவில் கூகுள் அசிஸ்டன்ட் தளத்தில் மட்டுமில்லாமல் அமேசான் அலெக்ஸா தளத்திலும் பயன்படுத்த முடியுமென்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad