Type Here to Get Search Results !

இனி கூகுள் மேப்ஸ்-ல் கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பயனர்களுக்கு தகுந்த பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது, இந்நிலையில் கூகுள் மேப் பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது, கண்டிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.


இப்போது கூகுள் மேப்ஸ்-ல் வழங்கிய புதிய அப்டேட் என்னவென்றால், ஆட்டோவில் செல்லும் போது ஆகும் பயணக் கட்டணத்தை தெரிந்துகொள்ள முடியும், பின்பு எப்போது போல ரூட் மேப் ஆகியவற்றை எளிமையாக காண முடியும். தற்சமயம் கூகுள் மேப்ஸ்-ல் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் டெல்லி மக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கூகுள் மேப்ஸ்-ல் புதிய அப்டேட் வசதியை பெற public transport mode-ஐ தேர்வு செய்ய வேண்டும், இது ஆட்டோவில் பயணிக்க விரும்புபவர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் இடத்திற்கான ரூட் மேப், பயணக் கட்டணம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவும். கூகுள் மேப்ஸ்-ல் பயணக் கட்டண வசதியுடன் cab mode என்பதும் இணைக்கப்பட்டுள்ளது, இது டெல்லி போக்குவரத்துத் துறை போலீஸார் வழங்கும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வைத்தே டெல்லி கூகுள் மேப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் மேப்ஸ் மேனேஜர் விஷால் தத் அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், தற்சமயம் வரை பயணிகள் தங்கள் பயணத்துக்கான கட்டணம் தெரியாமல் அதிகப்படியான கட்டணத்தை அளித்து வருகின்றனர், இதை தவிர்க்கவும், பயணிகள் முன் கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடவும் இந்தப் புதிய அப்டேட் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

Top Post Ad

Below Post Ad