இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
ஹைதராபாத் : இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் வெளி உலகிற்கு தெரியாமல் நேற்று எளிமையாக நடந்து முடிந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் எனவும் கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாகின.
டிசம்பர் 16 அன்று திருமண வரவேற்பு ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளதாக செய்திகள் மற்றும் அழைப்பிதழ் இந்த மாத துவக்கத்தில் இணையத்தில் வெளியாகின. அதை தொடர்ந்து, இன்று சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. சாய்னா நேவால் ட்விட்டரில் "ஜஸ்ட் மேரீட்" என போட்டு திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.