Type Here to Get Search Results !

கேபிள் டி.வி, டி.டி.எச் இல் விரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி?


கேபிள், 'டிவி' மற்றும்,டி.டி.எச்., போன்றவற்றில்,ஜனவரி முதல்,வாடிக்கையாளர்கள்,விரும்பிய சேனல்களைதேர்வு செய்யும் புதியநடைமுறை, அமலுக்குவருகிறது.


ஆனால், விரும்பியசேனல்களை தேர்வுசெய்வது எப்படி என்றநடைமுறையை, தனியார்நிறுவனங்களும், கேபிள், 'டிவி' நிர்வாகமும்தெரிவிக்கவில்லை.கேபிள்ஒளிபரப்பில், நாடுமுழுவதும், ஜனவரிமுதல்,'அலகாட்' என்ற,விரும்பிய சேனல்களை,வாடிக்கையாளர்களே தேர்வுசெய்து கொள்ளும் முறை,அமலுக்கு வருகிறது. 'டிராய்'என்ற, தொலைதொடர்புஒழுங்குமுறை ஆணையம்,இந்த புதியநடைமுறையைசெயல்படுத்தஉத்தரவிட்டுள்ளது.இதன்படி, 'டிவி'நிறுவனங்களே, தங்களதுசேனல்களின் கட்டணத்தைநிர்ணயித்துக்கொள்ளலாம்.இதையடுத்து,தனியார், 'டிவி'நிறுவனங்கள், தங்களதுசேனல்களுக்கானகட்டணத்தை நிர்ணயித்து,விளம்பரப்படுத்திவருகின்றன. அதனால்,ஜனவரி முதல், கேபிள்கட்டணம், தற்போதுஉள்ளதை விட, ஒன்றரைமடங்கு அதிகமாகலாம்.இந்நிலையில், விரும்பியசேனல்களை, எவ்வாறுதேர்வு செய்வது என்பதுகுறித்து, மக்கள்குழப்பத்தில் உள்ளனர்.

  

இதுகுறித்து, டி.டி.எச்.,வாடிக்கையாளர்,சுதாராணிகூறியதாவது:


எங்களதுவீட்டில், 'டாடாஸ்கை' நிறுவனத்தின்,டி.டி.எச்., என்ற, நேரடிஒளிபரப்பு வசதி உள்ளது.விரைவில், 'ரீசார்ஜ்' செய்யவேண்டி உள்ளது. வீட்டில், 'டிவி' பார்க்கும் போது,சேனல்களை தேர்வுசெய்வது குறித்து,விளம்பரம்ஒளிபரப்பப்படுகிறது.


எவ்வாறு தேர்வு செய்வுஎன்பது குறித்து,வாடிக்கையாளர் சேவைமையத்தில் கேட்டேன்.அப்போது, 'எங்களுக்கும்,இதுபற்றிய தகவல்கள்கிடைக்கவில்லை; 29ம்தேதிக்கு பின் தெரிய வரும்.எனவே, ஏற்கனவே நடப்பில்உள்ள தொகையையே,ரீசார்ஜ் செய்யுங்கள். புதியமாத கட்டணம் குறித்தும்,சேனல்களை தேர்வுசெய்வது குறித்தும்,நாங்கள்தெரியப்படுத்துவோம்'என்றனர். இவ்வாறு, அவர்கூறினார்


Top Post Ad

Below Post Ad