Type Here to Get Search Results !

நான்கு டி.எஸ்.பி... 400 போலீஸ்’ - பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நாளை (18.12.2018) அதிகாலை பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. 108 திவ்ய தலங்களில் முக்கியமானதும், தொண்டை மண்டல தலங்களில் முக்கியமானதாகப் போற்றப்படும் சென்னை، திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் திரளுவார்கள். `பரமபதம்' என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பை நேரில் கண்டால் வைகுண்டம்கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த வருடமும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்த்தசாரதி பெருமாள் கோயில் துணை ஆணையர் ஜோதிலட்சுமி கூறுகையில்,``ஒவ்வொரு வருடமும் பார்த்தசாரதி கோயிலில் சீரும் சிறப்புமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும். கடந்த வருடம் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் பரமபதவாசல் திறப்பைக் கண்டுகளித்தார்கள். இந்த வருடம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நான்கு டி.எஸ்.பி-க்கள் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கூட்டத்தைக் கண்காணிக்க பல சிசிடிவி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன. தற்காலிக கழிவறை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பக்தர்கள் பெருமாளை எளிதாகதரிசிப்பதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

Top Post Ad

Below Post Ad