Type Here to Get Search Results !

இந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு!


 இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 281 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இடிபாடுகள் அகற்றப்பட்டால் மேலும் பல உடல்கள் கண்டு பிடிக்கப்படலாம் என அந்நாட்டு மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம்என்று கருதப்படுகிறது. 


இந்த சுனாமியால் பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்று அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. 

நேற்று மாலை வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 222-ஆக இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 281 பலியாகியுள்ளதாகவும் இடிபாடுகள் அகற்றப்பட்டால் மேலும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும் அந்நாட்டு மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 



சுனாமி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய பேரிடர் மேலாணமைக் குழு ‘சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது. 650-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுனாமி தாக்கியப் பலப் பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியவில்லை. அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ‘ என அறிவித்துள்ளது


Top Post Ad

Below Post Ad