சுனாமி தாக்கியதன் நினைவு தினம்: 14 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணங்கள்
கடந்த 2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக தமிழகத்தில் நாகை, வேளாங்கண்ணி, கடலூர், சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி வேதாரண்யம் அருகே அமைச்சர் ஓ.எஸ் மணியன் அஞ்சலி செலுத்தினார். ஆறுகாட்டுத்துறை மீன்பிடி இறங்குதளத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன், மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல், வேளாங்கண்ணியில் மீனவர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.