தென்கெரோலினாவில் வேரோடு சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தும் ஊழியர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் வீசிய கடுமையான பனிப்புயலால் ஆயிரக்கணக்கான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் 310,000க்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தெற்கு கெரோலினா, வடக்கு கெரோ- லினா, ஜார்ஜியா, அலபாமா, டென்னசி, வெர்ஜி னியா ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. இத்துடன் கடும் பனிப் புயலும் வீசியதில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. சாலையில் ஓரடி உயரத்துக்குப் பனி உறைந்து உள்ளதால் முக்கிய சாலைகளில் வாகனப் போக்கு- வரத்து தடைபட்டுள்ளது. பனிப் பொழில் மறைந்த சாலைகளில் பல பகுதிகள் வாகனங்கள் சறுக்கி- யதில் விபத்துகள் ஏற்பட்டன. வட கெரோலினாவில் அமைந்து உள்ள சார்லட் நகரில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் மீது விழுந்ததில் அதன் ஓட்டுநர் உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. வடகெரோலினாவில் அமைந்து உள்ள மற்றொரு நகரான கிங்ஸ்- டனில் 18 சக்கர கனரக வாகனம் ஒன்று ஆற்றில் விழுந்து கிடப்பது காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் ஓட்டுநரை முக்குளிப்பாளர்-கள் முழுமூச்சுடன் தேடி வருகின்றனர். இப்பருவத்தில் வழக்கத்தைவிட கடுமையாக வீசிய பனிப்புயலால் பாதுகாப்பு காரணங்களுக்காக 1,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அடுத்த சில நாட்களுக்கும் கடும் பனிப்பொழிவு தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Source: Tamil murasu