காலஞ்சென்ற வாஜ்பாய் நினைவாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேசிய மோடி, வாஜ்பாய் மறைந்தாலும் அவரின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், “வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்பதை நம்புவதற்கு என்னுடைய மனது மறுக்கிறது. அனைத்து தரப்பினராலும் மரியாதையாக நேசிக்கப்பட்டவர். ஒரு பேச்சாளராக அவர் ஈடு இணையற்றவராக இருந்தார். நாடு உருவாக்கிய முக்கியமான பேச்சாளர்களில் அவரும் ஒருவர்” என்றார் மோடி.
Source Seithikathir